Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியின் சட்டையை பிடித்து... சசிகலா காலில் அவர் விழுவார்: புகழேந்தி பரபரப்பு பேச்சு!

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (19:48 IST)
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். அவரை நாங்கள் தான் சட்டையை பிடித்து முதல்வராக உட்கார வைத்தோம் என சசிகலா, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேசியுள்ளார்.
 
தொடக்கத்தில் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் ஆதரவுடன் முதல்வராக எம்எல்ஏக்களின் துணையுடன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா குடும்பத்தையே ஒதுக்கி வைத்துவிட்டார்.
 
இதனால் சசிகலா ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வருகின்றனர். தற்போது தினகரன் அணியாக சசிகலா அணி செயல்பட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தினகரன், சசிகலா அணியில் உள்ள பெங்களூர் புகழேந்தி எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, நாங்கள் சட்டையை பிடித்து உட்கார வைத்தவர்தான் தற்போதையை முதல்வர். இந்த முதல்வர் மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும். அப்போது இவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

90 மணி நேரம், ஞாயிறு வேலை ஏன்? L&T செய்தி தொடர்பாளர் அளித்த விளக்கம்..!

ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்தியும் ரூ.4435 கோடி நஷ்டம்.. மின்வாரியம் குறித்து அன்புமணி

கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: பள்ளி தாளாளர்-முதல்வர் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தொடங்கியது வேட்புமனு தாக்கல்.. சுயேட்சையின் முதல் மனு..!

திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ஒரே இரவில் ஆறு முறை ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments