நவநீதகிருஷ்ணன் தற்கொலைக்கு தூக்கு கயிறு தர தயார்: தினகரன் ஆதரவாளர்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (18:16 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை சுப்ரீம் கோர்ட் விதித்த கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக அனைத்து அரசியல் தலைவர்களும் ஒட்டுமொத்தமாக மத்திய அரசை குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு வகையான போராட்டங்களை அறிவித்துள்ளன

இந்த நிலையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் ஒரு படிமேலே போய் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று பாராளுமன்றத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த்தபோது, ''காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. சொல்லியதை செய்ய தவறியதால் அவர் தற்கொலை செய்ய நான் தூக்குக்கயிறு மற்றும் விஷத்தை தருகிறேன்' எனக் கிண்டலாக கூறினார். புகழேந்தியின் பேச்சு அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments