டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட சில மாநில முதலமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் என்பது தெரிந்தது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பாரபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழகம் உள்பட பல மாநில முதல்வர்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் இந்த புறக்கணிப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை பெரும்பாலும் இந்தியா கூட்டணியில் பங்கேற்று இருக்கும் முதல்வர்கள் தான் அறிவித்துள்ளனர் என்ற நிலையில் திடீரென பாஜக கூட்டணியில் உள்ள புதுவை முதல்வர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் இரு கட்சிகளின் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருவதாக கூறப்படும் நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வரங்க சாமி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.