Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசு செய்திகள் : விரைவில் அறிமுகம்

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (17:49 IST)
தமிழக அரசின் செய்திகளை பொது மக்கள் இனி வாட்ஸ்-அப் மூலம் தெரிந்துகொள்ளும் புதிய முறை அறிமுகமாக இருக்கிறது.


 
 
இப்போது எல்லோர் கையிலும் ஆண்ட்ராய்டு மொபைல் வந்துவிட்டது. அதில் வாட்ஸ்-அப் இருக்கிறது. அதன் மூலம் பல்வேறு தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படுகிறது.
 
இந்நிலையில், முதல் அமைச்சரின் அன்றாட அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகளை வாட்ஸ்அப் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
 
இதன் மூலம், அரசின் செய்திகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதோடு அதை மற்றவருக்கும் உடனடியாக தெரிவிக்க முடியும். மிக விரைவில் எண்ணற்ற பொதுமக்களுக்கு செய்திகள் சென்றடையும். 
நாம் அரசின் செய்திகளை இப்போது தொலைக்காட்சியிலோ அல்லது செய்தித்தாள்களின் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது வாட்ஸ்-அப் மூலம் ஒருவர் எங்கிருந்தாலும் தன்னிடம் உள்ள மொபைல் மூலம் எல்லா செய்திகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
 
இதற்கான ஏற்பாடுகளை தமிழக செய்தித்துறை பிரிவு செய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

Show comments