Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகவல் தொழில்நுட்ப இலாகா வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்..!

Webdunia
வியாழன், 11 மே 2023 (11:30 IST)
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியான நிலையில் நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
 
பிடிஆர் ஆடியோ விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவரது இலாக்கா மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தனக்கு தொழில் தகவல் தொழில்நுட்பத்துறை கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு தான் என்றும் நன்றியுடன் ஆக இருப்பேன் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலாக்காவை மாண்புமிகு முதலமைச்சர்  எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… வானிலை எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: மதுரை - சென்னை நீதிப்பேரணி: அண்ணாமலை

போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்.. மேயர், கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!

IRCTC இணையதளம் மீண்டும் முடங்கியது.. ஒரே மாதத்தில் 3வது முறை.. பயணிகள் அவதி

அடுத்த கட்டுரையில்
Show comments