Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு ; உருவபொம்மை எரிப்பு - சென்னையில் பதட்டம்

Webdunia
திங்கள், 22 மே 2017 (12:21 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் முன்னேற்றப்படையினர் இன்று சென்னையில் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அவர் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பை சேர்ந்தவர்கள், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இன்று காலை திடீரெனெ போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் ரஜினியின் உருவ பொம்மையை எரித்தும், நாட்டு வெடிகளை வெடித்தும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 
 
மேலும், ரஜினியின் வீட்டை முற்றுகையிட சென்ற அவர்களை அங்கு விரைந்து வந்த போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் மூலம் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது தடுக்கப்படும் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments