Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சொத்து வரி உயர்வு' - மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதா.? டிடிவி தினகரன் கண்டனம்..!!

Senthil Velan
சனி, 28 செப்டம்பர் 2024 (12:23 IST)
சொத்து வரி மீண்டும் உயர்த்த முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சொத்துவரியை மேலும் 6 சதவிகிதம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. 
 
ஏழை, எளிய மக்களின் மீது சுமையை ஏற்றாமல் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்துவரியை மேலும் 6 சதவிகிதம் உயர்த்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு 150 சதவிகிதம் அளவுக்கு சொத்துவரியை தமிழக அரசு உயர்த்திய நிலையில், தற்போது மேலும் 6 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
 
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் அறிக்கையில் சொத்துவரியை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதியளித்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக சொத்துவரியை உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே, திமுக அரசால் போடப்பட்ட வரிகளாலும், உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மக்களின் மீது சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.


ALSO READ: "உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முகவரி" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!


எனவே, ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் சொத்துவரி உயர்வுக்கான தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments