Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (08:32 IST)
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ஆகஸ்டு 4 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பை ஆதரிப்பதெனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்திய காந்தியவாதி சசி பெருமாள் மரணத்தில் சந்தேகங்களும், மர்மங்களும் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
 
இந்தச் சந்தேகங்களைப் போக்கவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. உயிர் நீத்த சசி பெருமாளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிற வகையில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கைப் பதிவு செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
 
இந்தச் சம்பவத்திற்குத் தமிழக அரசுதான் முழுப்பொறுப்பாகும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆகஸ்டு 4 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பை ஆதரிப்பதெனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.
 
இதேபோன்று, முழு அடைப்பு போராட்டத்திற்கு தேமுதிகவும் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Show comments