பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு .. தண்டனை அளித்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு..!

Siva
திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:21 IST)
தமிழகத்தையே உலுக்கிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான முறையில் வழிநடத்தியதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது

கடந்த 2018 ஆம் ஆண்டு பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்த நிலையில் அதன் பின்னர் அவர் ஒரு வருடம் சிறையில் இருந்து பின்னர் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது
 
தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பண ஆசையை காட்டி செல்வாக்கானவர்களுக்கு பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் நிர்மலா தேவிக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் கண்டிப்பாக மேல்முறையீடு செய்வார் என்றும் தீர்ப்பை நிறுத்தி வைக்க மனு தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது..

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்