Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவமனை ஊழியர் கைது

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (11:42 IST)
3 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்தவர் அங்குராஜ் (40). அங்குராஜ் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
 
சம்பவத்தன்று 3 வயது சிறுமி அங்குராஜின் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவருடன் அங்குராஜ் சிறிதுநேரம் விளையாடியுள்ளார். பின்னர், அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து நைசாக தன்னுடைய வீட்டுக்கு தூக்கி சென்றுள்ளார்.
 
பின்னர், அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி சத்தம் போட்டு அழுதுள்ளார். அதேநேரம், விளையாடிக் கொண்டிருந்த தனது மகளை காணவில்லை என அவரின் தாயார் தேடி அலைந்துள்ளார்.
 
அப்போது குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அங்குராஜின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அங்குராஜ் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை பார்த்துள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் அங்குராஜை பிடித்து பவானி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
 
அவரை கைது செய்த காவல் துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்