Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: அதிமுகவை எச்சரித்த பிரேமலதா!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (16:33 IST)
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுகவை எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுக தலைமை தேமுதிகவை கண்டுகொள்ளவே இல்லை
 
அதேபோல் திமுகவும் தேமுதிகவுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அதிமுக தலைமையை கடந்த சில நாட்களாக பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்
 
அந்த வகையில் தற்போது அவர் பேசியபோது ’234 தொகுதிகளிலும் நமக்கு வேட்பாளர்கள் உள்ளனர். கூட்டணி தர்மத்துக்காக பொறுமை காக்கின்றோம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிமுகவை கூறியுள்ளார். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிக கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றால் தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பயங்கரவாதிகள் முகாம்கள் தரைமட்டம்: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments