Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியை தூக்கிப்பிடிக்கிறாரா பிரேமலதா? – சர்ச்சை பேச்சால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (13:49 IST)
ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும்தான் பேச வேண்டும் என்ற தென்னிந்திய ரெயில்வேயின் அறிவிப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயாகந்த் “மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறில்லை” என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா “உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும். மக்களவை தேர்தலில் தமிழகத்தின் நிலைமை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.” என்று பேசினார். அப்போது “மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறில்லை” என்று அவர் பேசியுள்ளார்.

அவர் மும்மொழி கொள்கை குறித்து அப்படி பேசினாரா? அல்லது தற்போது ரயில்வே அதிகாரிகள் இந்தியில் பேச வேண்டும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அப்படி சொன்னாரா என்பது தெரியவில்லை. இரண்டில் எதுவாக இருந்தாலும் இந்தியை தூக்கிபிடிப்பதே பிரதானமாக பிரேமலதா பேசியதில் இருந்து தெரிகிறது. ஏற்கனவே இந்த இரு சம்பவங்களுக்கும் தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரேமலதா வரிந்துகட்டி கொண்டு சப்போர்ட் செய்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கு உள்ளாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்! போர் உருவாகும் சூழல்?

100வது பிறந்த நாளை கொண்டாடு நல்லகண்ணு.. கமல்ஹாசன் வாழ்த்து

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. எஃப்.ஐ.ஆரில் உள்ள அதிர்ச்சி தகவல்..!

20 ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடு! சுனாமி நினைவு தினம்! - கடற்கரையில் அஞ்சலி!

டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் வரவிருந்த அமித்ஷா திட்டம் ரத்து; ஜனவரிக்கு ஒத்திவைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments