Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன் ஒரு மாதிரியான ஆள்: பிரேமலதா பொளேர்!!!

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (13:28 IST)
திமுக பொருளாளர் துரைமுருகன் தூக்கத்தில் உளறியிருப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர். இதுகுறித்து துரைமுருகன் தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியதாகவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என கூறிவிட்டதாக சொன்னார்.
 
இதுகுறித்து விளக்கமளித்த தேமுதிக துணை செயளாளர் சுதீஷ், எங்களது கட்சி நிர்வாகிகள் துரைமுருகனிடம் சென்றது கூட்டணி குறித்து பேச அல்ல பர்ஸ்னல் விஷயமாக பேசச் சென்றனர் என்றும் துரைமுருகன் கூறுவது உண்மை இல்லை எனவும் கூறினார்.
 
தேமுதிக கூட்டணி குறித்து பேசியிருந்தாலும் கூட துரைமுருகன் இப்படி ஒப்பனாக பேசியது தேமுதிகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துரைமுருகன் உட்கார்ந்து கொண்டே தூங்குபவர் அதனால் தூக்கத்தில் எதாவது உளறியிருப்பார். அவர்  அவருக்கு அரசியல் நாகரிகம் கிடையாது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments