Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகன் இறந்த செய்தி கேட்டு மாமியார் அதிர்ச்சியில் உயிரிழப்பு.. நிறைமாத கர்ப்பிணி மகள் கதறல்..!

Mahendran
புதன், 28 ஆகஸ்ட் 2024 (14:02 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் மருமகன் உயிரிழந்த செய்தி கேட்டு மாமியார் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது கர்ப்பிணி மகள் கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நாகம்மாள் கர்ப்பமான நிலையில் அவர் தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

குழந்தை பிறக்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அருண்குமார் நேற்று இரவு மாமனார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அவர் விபத்தில் மரணமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த தகவலை அவருடைய வீட்டில் சொன்ன போது மருமகன் உயிரிழந்த செய்தியை கேட்ட மாமியார் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஒரே நேரத்தில் கணவர், அம்மா ஆகிய இருவரும் இறந்ததால் நாகம்மாள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாகம்மாளுக்கு தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு

பாமகவில் உறுப்பினர் தவிர்த்து அனைத்துப் பொறுப்புகளையும் துறந்த முகுந்தன்!

அடுத்த கட்டுரையில்
Show comments