Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகாத உறவால் கர்ப்பம்.. குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய்! – அரியலூரில் அதிர்ச்சி!

Prasanth Karthick
வியாழன், 2 மே 2024 (09:53 IST)
அரியலூரில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம்பெண் குழந்தையை கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அரியலூர் மாவட்டம் மீன்சுருட்ட்டி கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த அன்புதுரை என்ற 21 வயது இளைஞருடன் காதலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டிய அன்புதுரை இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் அன்புதுரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணும், அவரது தாயாரும் குழந்தையை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 28ம் தேதி திடீரென குழந்தையை காணவில்லை என அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ: பெண் காவலர்களை உல்லாசத்துக்கு அழைக்கும் டுபாக்கூர் போலீஸ் அதிகாரி! – வளைத்து பிடித்த ஒரிஜினல் போலீஸ்!

அப்போது இளம்பெண் மற்றும் அவரது தாயாரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீஸார் இருவரையும் தனித்தனியாக வைத்து விசாரித்தபோது அதிர்ச்சிக்குரிய உண்மை தெரிய வந்துள்ளது. திருமணம் ஆகாமலே தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்று விடுவது என முடிவு செய்த இருவரும், பச்சிளம் குழந்தையை கொன்று பெரியமடையன் ஏரிக்கரையில் புதைத்துள்ளனர்.

அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் இளம்பெண்ணையும், அவரது தாயாரையும் கொலை வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது முகநூலில் அவதூறு செய்தவர்களை கைது செய்ய கோரி புகார் மனு!

பதவி விலகிய ரிஷி சுனக்.! பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து.!!

முதுநிலை நீட் தேர்வு எப்போது.? தேதியை அறிவித்த தேசியத் தேர்வுகள் முகமை.!!

தமிழகத்தில் 11ம் தேதி வரை செம மழைக்கான வாய்ப்பு! – எந்தெந்த பகுதிகளில்?

யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களுக்கு தடை: பாகிஸ்தான் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments