Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 36,000 வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம்

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (09:38 IST)
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 36,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. 
 
இது இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டடுள்ளது. மேலும் 15 மணி நேர தொடர் மழை காரணமாக சென்னை சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 36,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெரம்பூர், வியாசர்பாடி, சூளைமேடு, புரசைவாக்கம், மேற்கு மாம்பலம், தி,நகர், கே.கே.நகர் மற்றும் வேளச்சேரியின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது என தகவல். 
 
மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. நிலை சீரானதும் உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments