Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு நெத்தியடி போஸ்டர்: பொதுமக்களின் கோபத்தை தூண்டாதே!

சசிகலாவுக்கு நெத்தியடி போஸ்டர்: பொதுமக்களின் கோபத்தை தூண்டாதே!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (12:58 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வர உள்ள சூழல் உருவாகியுள்ளது. இதற்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆதரவு இருந்தாலும் தொண்டர்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றே பேசப்படுகிறது.


 
 
சசிகலா பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த மாத இறுதியில் சசிகலா பொதுச்செயலாளர் ஆக கூடும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாத அதிமுகவினர் ஆரணியில் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட பேனர்களை கிழித்து எறிந்தனர்.
 
மேலும் சசிகலாவுக்கு எதிராக ஆர்.கே.நகர் தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், அம்மாவின் அரசியல் வாரிசாக பணம், பதவிக்காக ஆசைப்படும் சசிகலா அவர்களே ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் நின்று வென்று, கழக பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள் என கூறப்பட்டுள்ளது.
 
மேலும் அம்மாவின் மரணம் குறித்து உண்மையான தகவலை கோடிக்கணக்கான பொதுமக்கள் அறிய செய். பொதுமக்களின் கோபத்தை தூண்டாதே என கூறப்பட்டுள்ளது எந்த போஸ்டரில். அதிமுகவினரே ஒட்டிய இந்த போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Get Out ட்ரெண்டிங்.. 11 மணி நிலவரம்! காணாமல் போன அந்த ஹேஷ்டேக்!

ஆசியாவின் ஆழமான கிணற்றை தோண்டிய சீனா.. எத்தனை வருடம்.. எவ்வளவு ஆழம்?

பங்குச்சந்தையின் சரிவு தொடர்கிறது.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்..!

G Pay, PhonePe பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கட்டணம்.. ஆனா..?

சற்றே குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் ஒரு சவரன் ரூ.64000க்கும் மேல் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments