Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (15:52 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று  நீதிமன்றத்தில் சரண்டைந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

தமிழ் யூடியூப் சேனல்களில் பைக் ரைடிங், பைக் சாகசம் போன்றவற்றை ஒளிபரப்பி வருபவர் டிடிஎஃப். வாசன்.  இவருக்கு குறிப்பிட்ட ரசிகர்கள்  உள்ளனர்.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மதுரை  ஜிபி முத்துவை தன் வாகனத்தில் அமரவைத்து, அதிவேகமாக சென்றும், கைகளைவிட்டுவிட்டு, 150 கிமீ வேகத்தில்  பைக்கை இயக்கியுள்ள வீடியோவை வெளியிட்டிருந்தார்.  இது வைரலானது. தவறான முன்னுதாரணமாக இந்த வீடியோவை வெளியிட்ட  டிடிஎஃப் வாசன்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துவந்தது.

இதையடுத்து,  TTF வாசன் மீது ஏற்கனவே போத்தனூர் போலீஸார் 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது சூலூர் போலீஸார் 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இவர் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில்.,  மதுக்கரை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த டிடிஎஃப் வாசன் மாலை வரை நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டார். அவரிடம் 2 உத்தரவாதம் பெறப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments