Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் கருணாநிதியிடம் வாழ்த்து

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2015 (14:44 IST)
நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியில் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பூச்சி முருகன் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். 


 


நடிகர் சங்கப் பஞ்சாயத்தில் அதிகமாக அடிபட்ட பெயர் பூச்சி முருகன். ஏனெனில் இவர்தான் சரத்குமார் மற்றும் ராதரவிக்கு எதிராக தொடக்கத்தில் குரல் கொடுத்தவர். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தரப்பினர், நடிகர் சங்க நிலத்தை எஸ்.பி சினிமாஸிற்கு ஒப்பந்தம்  போட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்.
 
இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கும் இவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளர்.
 
அப்போது எடுத்த புகைப்படத்தை கருணாநிதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
விஷாலும், நாசரும் அம்மா புகழ் பாடிக்கொண்டிருக்கும் வேளையில், பூச்சி முருகன் கருணாநிதியை சந்தித்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

Show comments