Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மீது சிபிஐ விசாரணை: மேல்முறையீடு செய்ய முடிவு

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (22:56 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணை செய்யும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இன்று அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால் முதலமைச்சர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்ததை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது.

இதுகுறித்து விளக்கம் அளிக்க இன்று மூத்த அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை முடித்துவிட்டதாகவும், முடிந்துவிட்ட இந்த வழக்கை மீண்டும் சிபிஐ விசாரணை செய்ய  உத்தரவிட்டது தவறு என்றும் அதனால் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் பொன்னையன் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments