Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இன்றே சுதாரித்து கொள்ளுங்கள்

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (06:48 IST)
தீபாவளி, பொங்கல் என விசேஷ நாட்களில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் சொந்த ஊர் செல்ல மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயிலில் முன்பதிவு செய்வது வழக்கம். மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தாலும், முன்பதிவு ஆரம்பித்த முதல் நாளே பெரும் போட்டியுடன் விசேஷ நாட்களுக்கான முன்பதிவு முடிந்துவிடும் என்பது தெரிந்ததே
 
 
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை முதல் தொடங்குகிறது. நாளை காலை சரியாக 8 மணி முதல், ஜனவரி 10ஆம் தேதிக்கான முன்பதிவு தொடங்குகிறது. அதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ஆம் தேதியும் தொடங்குகிறது என்பதால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஊருக்கு செல்பவர்கள் இப்போதே சுதாரித்து முன்பதிவை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் கடைசி நேரத்தில் திண்டாடவேண்டிய நிலை ஏற்படும்
 
 
மேலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரிவோர் ஜனவரி 13ஆம் தேதி அல்லது ஜனவரி 14ஆம் தேதிதான் ஊருக்கு செல்வார்கள். எனவே ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு டிக்கெட் செப்டம்பர் 16ஆம் தேதியும் தொடங்குகிறது என்பதை ஞாபகம் வைத்து கொள்ளலாம்.
 
 
அதேபோல் பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்ப முடிவு செய்தவர்கள் ஜனவரி 19ஆம் தேதிக்கு  செப்டம்பர் 21 ஆம் தேதியும் ஜனவரி 20ஆம் தேதிக்கு செப்டம்பர் 22ஆம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments