Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமாத்திட்டாங்க... தோல்வியை ஏற்க முடியாமல் பொன்னார் புலம்பல்?

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (13:56 IST)
உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை,மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.   
 
தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என பேட்டி அளித்துவிட்டார். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை,மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசியல் ஆதாயத்திற்காக திமுக சிஏஏ, என்ஆர்சி-ஐ எதிர்க்கிறது. இருப்பினும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பை தலை வணங்கி ஏற்போம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments