ரஜினிக்கு காங்கிரஸ்ஸின் சான்றிதழ் வேண்டாம் – பொன் ராதாகிருஷ்ணன் பளார் !

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (09:49 IST)
ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினி ரசிகராக சொல்கிறேன் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது இன்னும் உறுதியாக கூற முடியாத சூழ்நிலையில் அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலுக்கு வந்த நடிகர்கள் யாரும் பிரகாசிக்க வில்லை. அதனால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினி ரசிகராக சொல்கிறேன் எனக் கூறினார்.

இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது சம்மந்தமாக பொன் ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரில் பேசிய போது ‘யார் அரசியலுக்கு வர வேண்டும், யார் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்வதற்கு காங்கிரஸ் கட்சி ஏதாவது சான்றிதழ் வைத்துள்ளதா ?.. கே.எஸ்.அழகிரி தன்னுடைய வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் ராகுல் காந்தியை முதலில் பாருங்கள். அதைவிட்டு ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பாக கருத்து தெரிவிக்காதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments