Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை கேட்ட 21 கேள்விகள்.. பொறுமையாக பதிலளித்த புஸ்ஸி ஆனந்த்.. மாநாடு நடக்குமா?

Siva
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (17:32 IST)
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கு புஸ்ஸி ஆனந்த் பொறுமையாக பதில் அளித்ததாகவும் இதனை அடுத்து மாநாடு நடத்த தமிழக வெற்றி கழகத்திற்கு காவல்துறை அனுமதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் அவர் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி விக்ரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான காவல்துறை அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாநாடு நடைபெற உள்ள இடத்தை போலீஸ் உயரதிகாரிகள் பார்வையிட்டு சில கேள்விகளை கேட்டதாகவும் காவல்துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கு புஸ்ஸி ஆனந்த் பொறுமையாக விளக்கம் அளித்ததாகவும் அந்த விளக்கத்தால் காவல் துறையினர் திருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 எனவே தவெக மாநாடு நடத்த காவல்துறை அனுமதி கிடைக்கும் என்றும் திட்டமிட்டபடி செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடத்தப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒருத்தி.. ஆனா வட நாட்டுல 10 பேர்..? - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டம்! தார்ப்பாயால் மூடப்படும் மசூதிகள்!

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய கூடாது: மதுரை ஐகோர்ட் கிளை தடை..!

சென்னையில் ஒரு நாள் ஆட்டோக்கள் ஓடாது.. போராட்டத்தை அறிவித்த சங்கம்..!

இதுதான் உங்க இருமொழிக் கொள்கையா..? வெளங்கிடும்..! - பிடிஆரை விமர்சித்த அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments