Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தரங்க இடங்களை குறிவைத்த போலீஸார்: பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் பேட்டி -வீடியோ

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2017 (13:56 IST)
சென்னை மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடந்த மாதம் 31ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய போது அதில் கலந்து கொண்ட பெண்களிடம் காவல்துறையினர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


 

கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு இந்திய பிரதமர் நரேந்திர மோடி திடீரென பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வானொலி மூலம் அறிவித்தார். பிரதமரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள், முதியோர் மற்றும் வங்கி ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைக் எதிராகவும் சனிக்கிழமையன்று (டிச. 31) சென்னை மேடவாக்கம் - மாம்பாக்கம் சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜனநாயக பூர்வமாக வாலிபர்கள் நடத்திய போராட்டத்தில் பள்ளிக் கரணை காவல்துறை அத்துமீறி, அராஜக தாக்குதலில் ஈடுபட்டது. போராட்ட வீரர்களை குறிவைத்து - பெண்கள் என்றும் பாராமல் பகிரங்கமாக உடைகளை களைந்தும், இழிவார்த்தைகளை இடைவிடாமல் பிரயோகித்தும் ஆண் காவலர்களே கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிரது.

அப்போது பள்ளிக் கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி போராட்டத்தில் பங்கெடுத்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டி வன்முறையில் ஈடுபட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் நெருங்கி, ‘நாங்கள் இப்போது ஆம்பிளைகள் என்பதைக் காட்டட்டுமா? என்று கூறி அவர்களுக்கு உளவியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு பெண்ணின் மார்பில் ஒரு அதிகாரி கை வைத்துள்ளார். கட்சிக் கொடியை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்திருந்த அந்தப் பெண்ணிடம் இருந்து கொடியைப் பறிப்பது போல மார்பில் கை வத்து, மானபங்கம் படுத்தும் வகையில் தகாத செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூரமான சம்பவங்களை பாதிக்கப்படட பெண்கள் கூறுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:-

 

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு: என்ன காரணம்?

கேரட் அல்வாவில் கலக்கப்பட்ட கெட்டு போன பால்.. திருமண விழாவில் 150 பேர் மயக்கம்..!

உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகள் பட்டியல்: சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு எந்த இடம்?

பொங்கல் தொகுப்பில் ஊழலா? அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் காந்தி பதிலடி..!

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டர் சிப்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்