Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுசூதனனை தடுத்து நிறுத்திய போலீஸ்: நீங்க தினகரன் ஆள் தானே?

மதுசூதனனை தடுத்து நிறுத்திய போலீஸ்: நீங்க தினகரன் ஆள் தானே?

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (17:48 IST)
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து ஆர்கே நகர் இடைத்தேர்தலை சந்திக்கிறது. சசிகலா அணியை சேர்ந்த தினகரனுக்கும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனனுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. யார் முன்னிலை பெறுவார், வெற்றி பெறுவார் என்பதில்.


 
 
ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் அந்த தொகுதியில் மிகவும் பிரபலமான, தெரிந்த முகம் என்பதால் வாக்காளர்களை வீடு, வீடாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று ஆர்கே நகரில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களிடம் வாக்கு சேகரிக்க சென்ற மதுசூதனனை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
 
நேற்று மதியம் ஒரு மணியளவில் நேதாஜி நகர் பள்ளிவாசலில் வாக்குச் சேகரிக்கச் சென்றார் மதுசூதனன். ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி செல்ல வேண்டாம், தொழுகையை முடிந்து வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினர்.
 
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதுசூதனன், இது என் தொகுதி, அவர்கள் எனக்கு வேண்டிய நண்பர்கள். நான் அவர்களை சந்திப்பதை நீங்கள் எப்படி தடுக்கலாம்? நீங்கள் தினகரன் ஆதரவு போலீஸ் தானே? என்றார்.
 
பின்னர் தொழுகை முடிந்து பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்தவர்கள் எப்படி மதுசூதனனை தடுக்கலாம்? என்று அவருக்கு ஆதரவாக பேசினர். ஆனால் சிலர மதுசூதனனுக்கு எதிராகவும் பேசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments