தூத்துக்குடியில் காவல்துறை பணிக்கான தேர்வில் ஜெயில் வார்டன் ஆள் மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவாட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறைக்காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடைப்பெற்றது. தேர்வில் சகோதரர்கள் ராஜா(25), முருகன்(21) ஆகியோர் ஒரே பெஞ்சில் அமர்ந்து தேர்வு எழுதியுள்ளனர். தேர்வின்போது முருகன் ராஜாவின் விடைத்தாளை பெற்று எழுதியுள்ளார்.
இதை கண்டுப்பிடித்த தேர்வு மைய மேற்பார்வையாளர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜா 4 வருடமாக ஜெயில் வார்டனாக பணியாற்றி வருவது தெரியவந்தது. தனது தம்பி முருகனையும் காவல்துறை பணியில் சேர்க்க, மீண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து எழுத வந்தது தெரிந்தது.
இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக ராஜா மீது வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.