Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண்ணுக்கு படிகட்டுகளாக மாறி உதவிய காவலர்கள்

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (18:22 IST)
மின்சார ரயிலில் இருந்து இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு காவலர்கள் படிகட்டுகளாக மாறி உதவி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று,  சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது.  இதனையடுத்து  பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில்,  படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா, கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்தார்.
 
இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர், அமுதா கீழே இறங்க உதவி செய்தனர். ரயிலின் நுழைவு வாயிலில் இரு காவலர்களும் படிக்கட்டு போல குனிந்து நின்றனர்.
 
கர்ப்பிணி பெண் அமுதா, அவர்களின் முதுகின் மீது கால் வைத்து கீழே இறங்கினார். இதேபோல், முதியவர்கள் கீழே இறங்கவும் காவலர்கள் உதவி செய்தனர். காவலர்களின் மனித நேயத்துக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments