Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துகுடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

Webdunia
புதன், 23 மே 2018 (15:00 IST)
தூத்துகுடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அதனால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு  வராத நிலையில் இன்று மீண்டும் அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இன்று காலை முதல் மீண்டும் தூத்துகுடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் மீண்டும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், நேற்று பலியான 11 உயிர்களுக்கு நீதிகேட்டும் போராடினர். இந்த நிலையில் திடீரென காவல்துறை வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு மீண்டும் பதட்டம் அதிகரித்தது. 
 
இந்த நிலையில் தூத்துக்குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாகவும், பொதுமக்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து காவல்துறையினர் ரப்பர் குண்டு மூலம் சுட்டதாகவும் தெரிகிறது. இந்த தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவருடைய உயிர் சற்றுமுன் பிரிந்ததாகவும் அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments