Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் போராட்டம் - துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (12:42 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.


 
ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்ற்றுகையிடவும் திட்டமிட்டு அப்பகுதி மக்கள் 50,000 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை நோக்கியும் இன்னொரு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் இன்று காலை சென்றனர். 
 
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மக்கள் போலீஸார் மீது கல் வீசியும், போலீஸ் வாகனத்தை அடித்தும் நொறுக்கினர். இதனையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியே கலவர பூமியாக காணப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
அப்போது, போலீசாரின் வாகனங்களை பொதுமக்கள் சேதப்படுத்தினர். மேலும், சில வாகனங்களை கழித்து பொதுமக்கள் கவிழ்த்து போட்டனர். அதோடு, கற்களை கொண்டு போலீசாரை தாக்கினர். ஒரு கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து போலீசாரின் மீது கற்களை எறிந்ததால், பின் வாங்கிய போலீசார் சுவர்கள் மீது ஏறி தப்பி ஓடினர்.  போராட்டக்காரர்கள் கல்வீசு தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. எனவே, அந்த பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன. அந்த பகுதியே தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
அப்போது ஒரு காவல் அதிகாரி பொதுமக்களை நோக்கி சுட்டதில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments