Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்பதாம் வகுப்பு மாணவி மீது ஒருதலை காதல்! – மறுத்ததால் நேர்ந்த விபரீதம்!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (09:27 IST)
புதுச்சேரியில் பள்ளி மாணவியை காதலித்து வந்த நபர், மாணவி காதலை ஏற்க மறுத்ததால் கொதிக்கும் எண்ணெய்யை மாணவி மேல் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாவட்டம் நரம்பை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். 20 வயதான மாதேஷ் லேப் டெக்னீஷியனுக்கு படித்து விட்டு தற்போது அந்த பகுதியிலேயே சிற்சிறு வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். மாதேஷ் நீண்ட நாட்களாக பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அவரது காதலை ஏற்றுக் கொள்ளாத மாணவி, தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்திருக்கிறார். சிறுமி வீட்டின் ஜன்னல் பக்கமாக சென்ற மாதேஷ் அங்கேயே ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய்யை கொதிக்க காய்ச்சி ஜன்னல் வழியாக சிறுமி மீது ஊற்றியுள்ளார். இதனால் உடலில் காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதலிக்க மறுத்த சிறுமி மீது கொடூரமான தாக்குதல் நடத்திய மாதேஷ் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments