Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி வழக்கில் திடீர் திருப்பம்? : பிலால் மாலிக்கை ராம்குமார் முன்னிலையில் போலீசார் விசாரணை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (14:56 IST)
சுவாதி கொலை வழக்கில், ராம்குமாரிடம் விசாரணை நடத்திவரும் போலீசார், திடீர் திருப்பமாக இன்று காலை, சுவாதியின் நெருங்கிய நண்பர் முகம்மது பிலால் மாலிக்கிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதனையடுத்து போலீசார் ராம்குமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்குமார் அளிக்கும் தகவல்களை இவ்வழக்கின் முக்கிய ஆதாரமாக சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
 
அதேபோல், சுவாதி கொலை செய்யப்பட்டவுடன், அவர் பிலால் மாலிக் என்ற வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. ஆனால், சுவாதியின் நெருங்கிய நண்பராகிய அவரிடம் போலீசார் இதுவரை பெரிதாக விசாரணை ஏதும் நடத்தவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது. 
 
இந்நிலையில், பிலால் மாலிக் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் தலையில் ஹெல்மெட்டுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
 
சுவாதியுடன் அவருக்கு இருந்த உறவு, ராம்குமாரை பற்றி சுவாதி அவரிடம் கூறியுள்ளாரா?, ராம்குமாரை அவருக்கு முன்பே தெரியுமா?, சுவாதிக்கு வேறு மாதிரியான பிரச்சனைகள் இருந்தனவா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. முக்கியமாக, அந்த விசாரணை முழுவதும் ராம்குமார் முன்னிலையிலேயே நடைபெற்றதாக கூறப்படுகிறது. 
 
இதையடுத்து, சுவாதி வழக்கில் போலீசார் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு.. உலக போராக மாறுமா?

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் : இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு..!

இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்.. போர் ஆரம்பித்துவிட்டதா?

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments