Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.20.79 கோடி அபராதம் வசூல்!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (10:12 IST)
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,76,018 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு என காவல் துறையினர் தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.     
   
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.     
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 9,76,018 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 9,76,018 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 8,83,402 வழக்குகள் பதிவு, ரூ.20.79 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யின் தவெகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட மூதாட்டிகள்.. வரவேற்ற இளைஞர்கள்..!

சிரியாவில் அசத் ஆட்சி வீழ்ச்சி - ஆக்கிரமிப்பு கோலன் குன்று குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்

வீட்டில் ஜெராக்ஸ் மிஷின் வைத்து 100 ரூபாய் கள்ளநோட்டு அடித்த நபர்.. சுற்றி வளைத்து பிடிப்பு..!

Selfie Camera தேவையில்ல.. வேற லெவல் Optionஉடன் களமிறங்கிய Lava Blaze Duo 5G! - விலை இவ்வளவுதானா?

நாய் மீது மோதிய அரசு பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments