Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (17:34 IST)
பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் கோவையைச் சேர்ந்த சின்மயா பள்ளியில் முதல்வர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சக மாணவிகளிடம் கூறிய அம்மாணவியை மிதுன் சக்ரவர்த்தி மிரட்டியுள்ளார். இதையடுத்து  அம்மாணவி மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அப்பள்ளியில் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
மேலும், பள்ளி நிர்வாகிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்