Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடித்த சிறுவர்கள் அரெஸ்ட்: திருநெல்வேலியில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2018 (11:31 IST)
திருநெல்வேலியில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்களை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 முதல் 8 மணு வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். இந்த தீர்ப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என போலீஸார் எச்சரித்திருந்தனர்.
 
இந்நிலையில் இன்று தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் சிறுவர்கள் ஆர்வ மிகுதியில் நீதிமன்றத்தில் தீர்ப்பை பின்பற்றாமல் பட்டாசு வெடித்து வருகின்றனர்.
 
அவ்வாறு திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் தீர்ப்பை மீறி காலை 7 மணிக்கு மேல் பட்டாசு வெடித்த 25 சிறுவர்களை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments