Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கெட்ஸ் போட்டு காத்திருந்த ரௌடி கும்பல்! – வளைத்து பிடித்த போலீஸார்!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (13:40 IST)
திரிபுவனம் அருகே மற்றொரு கும்பலை தாக்குவதற்காக கண்மாயில் பதுங்கியிருந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருபுவனம் அருகே உள்ள மேலராங்கியத்தை சேர்ந்தவர் லோடு முருகன். இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தற்போது சிறையில் உள்ளார். இவருக்கும் கட்டனூரை சேர்ந்த சிலருக்கும் நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கட்டனூர் கும்பலை கொலை செய்ய லோடு முருகனின் மனைவி காளீஸ்வரி திட்டமிட்டதாக தெரிகிறது.

இதற்காக கூலிப்படையினர் சிலரை தயார் செய்து கொண்டு புதுக்குளம் கண்மாய் பகுதிக்குள் காளீஸ்வரி பதுங்கி இருந்துள்ளார். அதேசமயம் அந்த வழியாக சாலைகளில் சென்ற சிலரை மறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி அந்த கும்பல் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மானாமதுரை காவல்துறையினருக்கு தகவல் தெரிய வரவும் டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் மூன்று குழுக்களாக பிரிந்த போலீஸார் கூலிப்படை பதுங்கியிருந்த கண்மாய் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.

அங்கு நடத்திய அதிரடி சோதனையில் காளீஸ்வரி மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 20 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! பெருகெடுத்து ஓடும் வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments