Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவி ஏழை மக்களின் வீடுகளை இடிப்பதா? ராமதாஸ் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (20:25 IST)
அப்பாவி ஏழை மக்களின் வீடுகளை இடிப்பதா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் அரசூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் 22 குடும்பங்களின் வீடுகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவாய்த்துறையினர் முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும். இடிக்கும் முயற்சியை  அரசு கைவிட வேண்டும்!
 
ரசூரில் மக்கள் வாழும் பகுதிகள் நீர்நிலைப் பகுதிகள் அல்ல. அவை மேடான பகுதிகள். சென்னையில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனங்களின் கட்டிடங்களை இடிக்காமல் பாதுகாக்கும் அரசு,  அப்பாவி ஏழை மக்களின் வீடுகளை இடிக்க முயல்வது நியாயமல்ல!
 
அரசூரில் வாழும் மக்கள் மிகவும் ஏழைகள். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் வீடுகளை இடிக்கக் கூடாது. அவர்கள் தொடர்ந்து அதே பகுதியில் வாழ வகை செய்வதுடன், அந்த இடங்களுக்கு பட்டா வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments