Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்ப்பு வெளியாகி 10 மாதங்கள் ஆகியும் பணிமூப்பு பட்டியல் ஏன் வெளியாகவில்லை: அன்புமணி

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (14:09 IST)
வணிகவரித்துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் பணிமூப்பு பட்டியல் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி 10 மாதங்களாகியும் இன்னும் ஏன் பட்டியல் வெளியிட வில்லை என பாமக தலைவர் அன்புமணி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
வணிகவரித் துறையில் உதவி வணிக வரி அலுவலர், பதிவுத்துறையில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்தின் மூலமாகவும், இரு பங்குகள் அதே துறைகளில் உதவியாளர் நிலையில் இருப்பவர்களைக் கொண்டு மாறுதல் மூலமான நியமனம் வழியாகவும் நிரப்பப்படுகின்றன. இந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர், உதவியாளர்கள் அடுத்த நிலை பதவியில் நியமிக்கப்படுவதை பதவி உயர்வாகத் தான் பார்க்க வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று கூறி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாறுதல் மூலமான நியமனங்களில் இட ஒதுக்கீடு கூடாது என தீர்ப்பளித்தது. அதன்படி, 2000-வது ஆண்டு முதல் மாறுதல் மூலமான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு ரத்து செய்தது.
 
அதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என அறிவித்ததுடன், மாறுதல் மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2018-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தீர்ப்பளித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பான இன்னொரு வழக்கில் கடந்த 29.11.2021 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், 1981 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான பணிமூப்பு பட்டியலை இரு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும்; அதன்பிறகே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. 
 
ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி 10 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிமூப்பு பட்டியலை வணிகவரித்துறை நிர்வாகம் வெளியிடாமல் தாமதிக்கிறது. தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியமான துறை வணிகவரித்துறை ஆகும். அத்துறையின் பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வும், சமூக நீதியும் வழங்கப்படாததால், அத்துறையில் பணிச்சுமை அதிகரித்து, பணிகள் முடங்குவது வணிகவரி வசூல் உள்ளிட்ட பல விஷயங்களை பாதிக்கும். உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குப் பிறகும் வழங்க மறுப்பது நியாய மற்றது. வணிகவரித்துறை பணியாளர்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதியை வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அதை நிறைவேற்றும் வகையில் 1981 முதல் 2020 வரையிலான வணிக வரித்துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
இவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments