பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன்: தமிழில் பேசிய பிரதமர்

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (19:13 IST)
மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இன்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, ஒருசில வார்த்தைகள் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தமிழில் வணக்கம் என்று சொல்லி பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி. தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் தான் தலைவணங்குவதாக கூறினார். பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுவதாகவும் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே கல்வி கற்றதாக அர்த்தம் என்றும் தெரிவித்தார்.

முத்ரா யோஜனா திட்டத்தில் பலனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்றும், பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து தந்துள்ளதாகவும் மோடி பேசினார்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் அரசை விட அதிக நிதியை திட்டக் கமிஷனில் இருந்து தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளதையும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்

இருப்பினும் அனைவரும் எதிர்பார்த்த காவிரி மேலாண்மை குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசாம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்.. அண்டை மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்..!

தங்கத்தின் விலை புதிய உச்சம்.. ரூ.1,01,000 தாண்டியது.. வெள்ளியும் ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

தவெக தனித்து போட்டியிட்டால் அதிமுக அல்லது திமுக தான் ஜெயிக்கும்.. விஜய்க்கு படுதோல்வி கிடைக்கும்: அரசியல் விமர்சர்கள்..!

திமுகவுடன் கூட்டணியா? தவெகவுடன் கூட்டணியா? இரண்டாம உடைகிறதா தமிழக காங்கிரஸ்?

பீகாரில் இந்தியா கூட்டணியை முடிச்சிட்டோம், எங்கள் அடுத்த இலக்கு தமிழ்நாடு தான்: அமித்ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments