Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பெரிய கோவிலில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை: அதிரடி உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (17:00 IST)
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
தஞ்சை பெரிய கோயில் வளாகம் பிளாஸ்டிக் இல்லாத பகுதி என்ற அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். 
 
இந்த நிலையில் இன்று முதல் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக் கொண்டார். 
 
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர், வட்டாட்சியர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் தீவிரமாகும் பருவமழை.. தென்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

திருச்செந்தூரில் நாளை கந்தசஷ்டி விழா: பக்தர்கள் குவிந்ததால் கூடுதல் பாதுகாப்பு..!

கைத்தட்டலுக்காக அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதா? பிரியங்காவுக்கு பாஜக வேட்பாளர் கண்டனம்..!

டிரம்ப் முன்னிலை எதிரொலி: இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம்..! சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நவம்பர் மாதத்தில் முதல்முறையாக உயரும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments