Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

22வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!

petrol
, சனி, 30 ஏப்ரல் 2022 (07:15 IST)
கடந்த 21 நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று 22-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து அதன் பயனை பொதுமக்களுக்கு அனுபவிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

51.27 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!