Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்டாவுக்கு தடை விதிக்க கூடாது: கமல் பேட்டி!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (15:13 IST)
ஜல்லிகட்டு போராட்டத்திற்கு தனது ஆதரவு அளித்து வந்தார் நடிகர் கமல். மேலும் ட்விட்டர் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  தொடர்ந்து தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார். நேற்று போராட்டம் வன்முறையாக மாறியது.

 
நேற்று, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களையும், பொதுமக்களையும்  போராட்டக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பல்வேறு இடங்களில் காவல்துறையே வாகனங்களை  கொளுத்திய காட்சிகள் இணையத்தில் வெளியானது. காவல்துறையின் இந்த செயலைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில்  கண்டனம் தெரிவித்திருந்தார் நடிகர் கமல்.
 
இது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கமல் பதிலளிக்கையில்:-
 
மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அதிருப்தியின் அடையாளம்தான் போராட்டமாக  மாறியது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது கட்சி சாயம் பூசப்படுகிறது. போராடுபவர்கள் அனைவருமே எதிரிகள்  அல்ல. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மோசமாக சித்தரிக்க கூடாது. 
 
ஜல்லிக்கட்டை தடுக்க கூடாது. ஆனால் அதனை முறைப்படுத்தலாம். ஜல்லிக்கட்டு மட்டும் அல்ல எதையும் தடை செய்ய  கூடாது. ஜல்லிக்கட்டு தடை சரி என்றால் மாட்டு இறைச்சி ஏற்றுமதி எப்படி சரியாக இருக்கும். 
 
அதேப்போல பீட்டாவை தடை செய்வதை விட ஒழுங்குபடுத்துதல் வேண்டும். ஒன்றை தடை செய்தால் மற்றொரு பெயரில்  அது உருவாகும். பீட்டாவுக்கு தடை விதிக்க கூடாது. பீட்டா இல்லை என்றாலும் விலங்குகள் நல அமைப்பு கண்டிப்பாக தேவை  என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

நூற்றாண்டு விழாவில் இது தான் மரியாதையா? நாராயணசாமி நாயுடு சிலையை மாற்ற கூடாது: ராமதாஸ்

பள்ளி மாணவர்களின் காலை சிற்றுண்டியில் பல்லி.. 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

அமெரிக்க கப்பல்களுக்கு கட்டண விலக்கு இல்லை.. மறுப்பு தெரிவித்த பனாமா

சட்டப்படி தான் இந்தியர்களின் கை கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments