Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாட்டை பராமரிக்கிறத பற்றி யாருக்குடா சொல்லித்தறீங்க? - பீட்டாவிற்கு பதிலடி

மாட்டை பராமரிக்கிறத பற்றி யாருக்குடா சொல்லித்தறீங்க? - பீட்டாவிற்கு பதிலடி
, வியாழன், 19 ஜனவரி 2017 (18:32 IST)
ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற அனுமதி வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 

 
ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதை காரணம் காட்டித்தான் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தடைபெற்றது. 
 
இந்நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெளிநாடுகளில் பால் உற்பத்திகாக ஜெர்சி மாடுகள் எப்படி துன்புறுத்தப்படுகின்றன என்பதை விவரித்து சில தகவல்களை சிலர் பகிர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
ஜெர்சி பசு, கலப்பினம் செய்யப்பட்ட வெளிநாட்டு மாடுகளையெல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு கண்ணீர் வருதுடா..
 
பால் பெருக்கத்திற்காக ஊசியப்போட்டு 50 லிட்டர், அறுபது லிட்டர் பாலை தூக்கமுடியாம, மடு பெருத்து அந்த மாடு படுக்கவும் முடியாம, நடக்கவும் முடியாம சாகுற வரைக்கும் துடிதுடித்து வாழுது.
 
ஒரு மாடு சிரமம் இல்லாம எத்தனை லிட்டர் பாலை மடுவுல சுமக்க முடியும்னு பீட்டாகாரனுக்கு தெரியுமா? 12 லிட்டர் தான் அதிகபட்சம். அதுக்கு மேல இருந்தா மாட்டோட மடு அளவை பார்த்தே கன்றை அவிழ்த்து விட்டுறுவோம் நாங்க.
 
அது மட்டுமில்லாமல் மடுவுல மிசினபோட்டு கறக்குறானுங்க.. ரத்தம் வர வர அது உறிஞ்சுது. மிசின் போட்டு கறக்கும்போது அந்த மாடு எவ்வளவு வலியை உணரும்னு பீட்டாகாரனுக்கு தெரியுமா??
 
நாங்க கையால பால் கறக்கும்போதே, மாடுக்கு சின்ன உறுத்தல்கூட இருக்கக்கூடாதுனு, இரண்டு லிட்டருக்கு ஒரு தடவை எண்ணெயை காம்புல தடவி கறப்போம் டா. அந்த ஜெர்சி மாடுகள்லாம் உங்கள்ட சொல்லுச்சாடா நாங்க சந்தோஷமா இருக்கோம்னு?? அதுக்குலாம் தடை வாங்கிட்டீங்களாடா?
 
மாட்டை பராமரிக்கிறத பற்றி யாருக்குடா சொல்லித்தற்றீங்க? ” என அதில் காட்டமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு ; நாளை பேருந்துகள் இயங்காது - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு