Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர்செல்வத்திற்கா மக்கள் வாக்களித்தார்கள்: தம்பிதுரை மீண்டும் சீண்டல்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2017 (17:21 IST)
மக்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள்? எனக்கா மக்கள் வாக்களித்தார்கள். கட்சிக்குத்தானே வாக்களித்தார்கள் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற துணை சபாநயகருமான தம்பித்துரை கேள்வி எழுப்பியுள்ளார்.


 

ஏற்கனவே சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “சின்னம்மா உடனடியாக முதல்வர் பதவியை ஏற்று செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தொண்டர்களின் வேண்டுகோள். இதை நிறைவேற்றித்தர வேண்டுமென்பதும், அம்மா ஆட்சியை சின்னம்மா எடுத்து நடத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அதை தான் நான் அறிக்கையாக கொடுத்திருக்கிறேன்.

ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தாரோ அதை சசிகலாவால் நிறைவேற்ற முடியும் என்பதால், தொண்டன் என்ற முறையில் சசிகலா ஆட்சிப்பொறுப்பினை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்” என்றார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தம்பிதுரை, "அதைப்பற்றி எல்லாம் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. கட்சியும், ஆட்சியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.

மக்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள்? எனக்கா மக்கள் வாக்களித்தார்கள். கட்சிக்குத்தானே வாக்களித்தார்கள். எனவே கட்சித்தலைமையும், ஆட்சித்தலைமையும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். அது தான் நல்லது" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் தொகுப்பில் ஊழலா? அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் காந்தி பதிலடி..!

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டர் சிப்.. சென்னை ஐஐடி சாதனை..!

குறைந்த விலையில் அனைத்து மருந்துகளும்.. 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம்!

2024-2025 ஆண்டின் முதல் தவணை நிதி கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்..!

கும்பமேளா மிகப்பெரிய வெற்றி.. எந்த பிரச்சனையும் இல்லை.. சமாஜ்வாடி குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகை பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments