Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள்" -கோவை திமுக வேட்பாளர்

sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (18:20 IST)
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன்,கம்யூனிஸ்ட்.,  மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியானது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் கோவை தொகுதியில் அண்ணாமலையை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது; 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள். அதை நல்ல காமெடியாகவே எல்லோரும் பார்க்கிறார்கள், அவர் பேசுவது நம்பும்படியாக இல்லை என்று கூறினார்.மேலும், பாஜகவினருக்கு பேச எதுவும் இல்லாததால், கச்சத்தீவு விவகாரத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.

 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments