Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் படேலின் போராட்டம் அபாயகரமானது: வைகோ எச்சரிக்கை

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2015 (09:54 IST)
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரை ஒன்றுதிரட்டி ஹர்திக் படேலின் நடத்திவரும் போராட்டம் அபாயகரமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரை ஒன்றுதிரட்டி போராடி வரும் ஹர்திக் படேல் என்ற இளைஞர், கடந்த ஜூலை மாதம்தான், இடஒதுக்கீடு போராட்டத்திற்கு ஒரு அமைப்பை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரண்டு மாதங்களில் குஜராத் மாநிலம் முழுவதும் படேல் சமூகத்தினரை லட்சக்கணக்கில் திரட்டுவதற்கு ஹர்திக் படேலுக்கு சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணம் என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தகவல்கள் வந்துள்ளன.
 
குஜராத் மாநிலத்தின் அரசியல் அதிகாரத்திலும் படேல் சமூகம்தான் முன்னிலையில் இருக்கின்றது. பிற்படுத்தப்பட்டோர் என்று அரசியல் சட்டம் வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக நீதி உரிமையான இட ஒதுக்கீட்டை படேல் சமூகத்தினர் தங்களுக்கும் கோருவது அவர்கள் உரிமை.
 
ஆனால், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும்; இல்லையேல் இட ஒதுக்கீட்டு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது அரசியல் சட்டத்திற்கு சவால் விடும் வகையில் இருக்கிறது.
 
இந்நிலையில் இரண்டாம் கட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஹர்திக் படேல் தெரிவித்துள்ள கருத்துகளும், குஜராத்தில் நடத்தி வரும் போராட்டமும் அபாயகரமானவை என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments