தூத்துகுடியில் துணை ராணுவம்: அமைதி திரும்புமா?

Webdunia
வியாழன், 24 மே 2018 (08:56 IST)
தூத்துகுடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருவதால் துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளதாகவும், இதனையடுத்து தூத்துகுடியை நோக்கி துணை ராணுவம் விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்னும் தூத்துகுடியில் அமைதி திரும்பவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடும் வரையிலும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்களின் தரப்பில் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக தூத்துகுடியில் பதட்டம் நீடித்து வருவதால் போராட்டத்தை கட்டுப்படுத்தி இயல்பு நிலை திரும்ப துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொண்டதாகவும், இதன்படி துணை ராணுவப் படையினர் விரைவில் தூத்துக்குடிக்கு வருகை தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments