Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

Mahendran
புதன், 22 மே 2024 (14:00 IST)
பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார் என்றும் ஏனென்றால் பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்றும் அமித்ஷா எதிர்க்கட்சி தலைவராகி விடுவார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே மீதம் உள்ளது என்பதும் ஜூன் ஒன்றாம் தேதியுடன் வாக்கு பதிவு அடையும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பாஜக மீட்டும் ஆட்சி அமைக்காது என்று இந்திய கூட்டணி தலைவர்கள் உறுதியாக கூறிவரும் நிலையில் சமீபத்தில் வயது முதிர்வு காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வு பெற வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளதை ப சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்
 
77 வயது ஆண்ட நவீன் பட்நாயக் ஓய்வு பெற வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறார் என்றால் 73 வயதான மோடிக்கு அவர் மறைமுக அறிவுரை கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார் என்று என்றும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிடுவார் என்றும் ப சிதம்பரம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments