நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்: ஓபிஎஸ் அதிரடி

Mahendran
திங்கள், 5 பிப்ரவரி 2024 (13:48 IST)
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்ட எதையும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இரண்டு கோடி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்கிறார் என்றும் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்றும் எனவே நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.  

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் கண்டிப்பாக எங்கள் பக்கம் நியாயம் இருப்பதால் எங்களுக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஓபிஎஸ் சொல்வது போல் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments