அதிபுத்திசாலி ஈபிஎஸ்.. அறிவாளி ஜெயக்குமாரிடம் கேளுங்கள்: செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் பதில்..!

Siva
வியாழன், 1 பிப்ரவரி 2024 (17:08 IST)
நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டம் குறித்த வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்த அதிமுக தற்போது சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதாக கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்த கேள்வியை அதிபுத்திசாலி ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அறிவாளியான ஜெயக்குமார் இடம் கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம்  முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

மேலும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஒரு சில நாளில் தான் அறிவிக்க இருப்பதாகவும் தற்போது பாஜக அணியில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரட்டை இலை பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் விரைவில் அந்த வழக்கு முடிவுக்கு வரும் என்றுதான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனி அணியாக அமைத்து பாஜகவுடன் கூட்டணி சேருவாரா அல்லது பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்வாரா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு?!.. விஜயை விளாசும் நயினார் நாகேந்திரன்..

வரிமான வரித்துறை அபராதம்!.. இமேஜை கொடுத்துக்கொண்ட விஜய்!. இனிமே வச்சு செய்வாங்களே!..

ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை.. EMI வாங்கியவர்களுக்கு என்ன தாக்கம் ஏற்படும்?

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததா? நீதிபதி சொன்னது என்ன?

திமுக அப்ப இனிச்சது.. இப்ப கசக்குதா?!.. விஜயை பொளக்கும் ரங்கராஜ் பாண்டே!..

அடுத்த கட்டுரையில்
Show comments